ஒரு சமையலுக்கு மூன்று கடைகளுக்கு அலைய வேண்டியதில்லை. மஞ்சப்பையில் பல கடைகளின் பொருட்களை ஒரே பையில் சேர்த்து, ஒரே டெலிவரியில் பெறலாம்.
1. தேடுங்கள் அல்லது பேசுங்கள்
முகப்பில் வகைகளைத் தொடுங்கள் (காய்கறிகள், மளிகை, கோழி & இறைச்சி…), அல்லது தேடலில் "தக்காளி", "thakkali" என்று தட்டச்சு செய்யுங்கள். 🎤 பொத்தானைத் தொட்டு "ஒரு கிலோ தக்காளி, அரை கிலோ வெங்காயம்" என்று பேசலாம்.
2. கடையைத் தேர்ந்தெடுங்கள்
ஒரே பொருள் பல கடைகளில் இருந்தால், ஒவ்வொரு கடையின் அன்றைய விலையும் தெரியும். உங்களுக்குப் பிடித்த கடையைத் தேர்ந்தெடுங்கள்.
3. பையில் சேருங்கள்
வேறு கடையின் பொருளைச் சேர்த்தாலும் பை காலியாகாது. பையில் ஒவ்வொரு கடையின் பொருட்களும் தனித்தனியாகத் தெரியும்.
4. நேரம், பணம் தேர்ந்தெடுங்கள்
"இப்போதே" அல்லது உங்களுக்கு வசதியான நேரம்; UPI, கார்டு அல்லது டெலிவரியின்போது பணம். கூடுதல் கடைக்கு சிறிய கட்டணம் இருந்தால் செக்அவுட்டில் முன்பே தெரியும்.
5. கண்காணியுங்கள்
எல்லாக் கடைகளும் பேக் செய்த பின் ஒரே டெலிவரி பார்ட்னர் அனைத்தையும் எடுத்து வருவார். அவர் எங்கே இருக்கிறார் என்பதை வரைபடத்தில் பார்க்கலாம்.
சிறு குறிப்பு: எடைக்கு விற்கும் பொருட்களுக்கு, கடை எடை போட்ட உண்மையான அளவுக்கே இறுதி பில் வரும். பொருள் கிடைக்கவில்லை என்றால் அதற்குப் பணம் இல்லை.
No more walking to three shops for one meal. On Manjapai you can put items from several shops in one bag and get them in one delivery.
1. Browse, search or speak
Tap a category on the home screen (Vegetables, Groceries, Chicken & Meat…) or type "tomato" or "thakkali" in search. Tap 🎤 and say "one kilo tomato, half kilo onion".
2. Pick the shop
When several shops sell the same item, you see each shop's rate of the day. Choose the shop you like.
3. Add to your bag
Adding an item from another shop does not empty your bag. The bag shows each shop's items separately.
4. Choose time and payment
"Now" or a time slot that suits you; UPI, card or cash on delivery. If there is a small charge for an extra shop, checkout shows it before you pay.
5. Track it
Once every shop has packed, one delivery partner brings it all. Follow them on the map.
Tip: for items sold by weight, the final bill is for the actual weight the shop packed. Anything a shop could not supply is not charged.
மஞ்சப்பை ஆப்பில் ஆர்டர் செய்யுங்கள்Order on the Manjapai app
உங்கள் அருகிலுள்ள கடைகளிலிருந்து மளிகை, காய்கறி, பால் வீட்டுக்கே.Groceries, vegetables and milk from your nearby shops, to your door.